காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டுயானைகள் சின்கோனா எஸ்டேட் பகுதியில் இருக்கும் தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சேக்கல்முடி எஸ்டேட் செல்லும் பாதையில் அமைந்துள்ள சோலையாறு மின் நிலையத்தில் நுழைவு வாயிலை காட்டுயானைகள் உடைத்து அட்டகாசம் செய்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியிலிருக்கும் தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து உள்ளே இருந்த சமையல் பொருட்கள், எரிவாயு சிலிண்டர் போன்றவற்றை காட்டு யானைகள் தூக்கி வீசியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.