காட்டு யானைகள் தேவாலயம் மற்றும் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டுயானைகள் சிங்கோனா 10-ஆம் பாத்தி குடியிருப்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிட்டது. இதனையடுத்து காட்டு யானைகள் அங்குள்ள புனித ஜெபமாலை மாதா தேவாலயத்தின் பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
அதன் பிறகு காட்டு யானைகள் மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசியை தின்று நாசப்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.