தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துபள்ளம் கிராமத்தில் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயிகள் தக்காளி, சோளம், நெல், கம்பு உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்களை சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி செய்யப்பட்ட தக்காளி, நெல் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கிறது.
இதனால் நஷ்டம் அடைந்து விவசாயிகள் மிகவும் வேதனையில் இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த பாலக்கோடு வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை ஈடுபட்டுள்ளனர். மேலும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.