ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 24 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர் சாலை பஜார் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த குரங்குகளை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் 2 கூண்டுகளை வைத்தனர். மேலும் கூண்டுகளுக்குள் குரங்குகள் விரும்பி சாப்பிடும் பழங்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூண்டுகளுக்குள் சுமார் 24 குரங்குகள் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து வனத்துறையினர் கூண்டுகளை வாகனத்தில் ஏற்றி குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.