Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல…. வேதனையில் விவசாயிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள வெய்க்காலிபட்டியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் கோபாலகிருஷ்ணனின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை, பனை மற்றும் மா மரங்களை சாய்த்தும், முறித்தும் நாசப்படுத்தியுள்ளது.

மேலும் காட்டு யானைகள் மாணிக்கவாசகம் என்பவருக்கு சொந்தமான வயலுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அடுத்து விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |