Categories
உலக செய்திகள்

அட்டூழியம் செய்து வந்த தலிபான் பயங்கரவாதிகள்… ராணுவம் எடுத்த அதிரடி முடிவு… 45 பேர் சுட்டுக்கொலை…!!

தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு பல உயிர்களை எடுத்துவந்த தலிபான் பயங்கரவாதிகளில் 45 பேர் ராணுவம் மற்றும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார், காந்தஹார் மாகாணங்களில் ராணுவத்தினர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தகைய தாக்குதலில் 45 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.மேலும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. கடந்த சில நாட்களாகவே தலீபான் பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மற்றும் போலீஸ் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி உள்ள பகுதிகளை குறிவைத்து ராணுவ நடவடிக்கை மேற் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் ஆதிக்கம் கொண்டுள்ள பகுதிகளை குறித்த ரகசிய தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் கோக்யானி மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய தலீபான்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள ராணுவம் முடிவு செய்துள்ளது.நேற்று முன்தினம் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களை சுற்றி வளைத்து ராணுவம் அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. இத்தகைய தாக்குதலை எதிர்பார்க்காத தலிபான் பயங்கரவாதிகள் முதலில் நிலைகுலைந்து நின்றாலும் பின்னர் கவனத்துடன் இராணுவத்தினரிடம் பயங்கர மோதல் நடத்தினர். அதில் 31 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் 13 நபர்கள் பாகிஸ்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டார்.

மேலும் 15 நபர்கள் படுகாயம் அடைந்த நிலையில் உள்ளனர். இத்தகைய செய்தியை நங்கர்ஹார் மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறினார். அதேசமயத்தில் இத்தகைய மோதலில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் எவரும் இறந்தார்கள் அல்லது படுகாயம் அடைந்துள்ளார்கள் என்பது பற்றிய தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் தலீபான் பயங்கரவாதிகளின் பத்து வாகனங்களும் ஆயுதங்களும் வெடிப் பொருட்களும் முழுவதுமாக அழிக்கப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து காந்தஹார் மாகாணத்தில் காக்ரிஜ் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து அன்னிய படையினர் வான்தாக்குதல் மேற்கொண்டனர்.

இத்தகைய தாக்குதலில் 10 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என போலீஸ் செய்தி தொடர்பாளர் ஜமால் நசீர் பராக்ஜாய் கூறியுள்ளார். மேலும் காந்தஹார் மாகாணத்தில், ஷாவாலி கோட் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் இராணுவத்தினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அத்தகைய மோதலின் 4 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பாதுகாப்பு படையினர் சோதனை சாவடி மீது தலிபான்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததை தொடர்ந்தே இத்தகைய மோதல் நடத்தப்பட்டதாக கூறினர். இவ்வாறு தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதில் 45 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ள சம்பவமானது அந்த அமைப்பினற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கின்றது.

Categories

Tech |