பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக நயன்தாரா மார்டனாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.
On the cover of @Forbes_India Decoding Success 👍 #ForbesIndia pic.twitter.com/SkxQNrVMea
— Nayanthara✨ (@NayantharaU) October 11, 2021
மேலும் மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் கோல்ட் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்காக செம மார்டனாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது ரசிகர்களை கவர்ந்த இந்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.