இந்த உலகத்தில் பிச்சை எடுப்பதை ஸ்மார்ட்டாக செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்பதை ஒருவர் நிரூபித்துள்ளார். ரோம் நாட்டைச் சேர்ந்த டேவிட் என்ற பிச்சைக்காரர் கிடைக்கும் வேலையை செய்து கொண்டும், யாராவது உணவு அளித்தால் அதனை சாப்பிட்டுக் கொண்டும் தெருக்களில் வசித்து வந்துள்ளார். ஒரு நாள் டேவிட்டிற்கு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதனால் டேவிட் ஒரு கடைக்கு சென்று மூன்று கப்புகள் மற்றும் ஒரு பேனாவை வாங்கி உள்ளார்.
அந்த கப்புகளில் ஒவ்வொரு மதத்தின் பெயரையும் எழுதி வைத்தார். அதன் பிறகு எந்த மதம் எனக்கு உதவி செய்கிறது என்பதை பார்ப்போம் என டேவிட் அந்த அட்டையில் எழுதி அதனருகே உட்கார்ந்துகொண்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் தங்களது மதம் தான் பெரிது என்பதை நிரூபிக்க போட்டி போட்டுக்கொண்டு அந்தக் கப்புகளில் பணத்தைப் போட ஆரம்பித்தனர்.