அட்டை பாரத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மினி லாரியை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவர் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக சரவணகுமார் தினமும் மாலையில் காரமடையில் இருந்து அட்டை கோன் பாரம் ஏற்றிக்கொண்டு மறுநாள் காலை அதனை ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் இறக்குவது வழக்கம். இந்நிலையில் சரவணக்குமார் இரவு நேரத்தில் பவானிசாகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் கடைக்கு முன்பு மினி லாரியை நிறுத்தி விட்டு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார்.
இதனையடுத்து மினி லாரியில் இருந்த அட்டை கோனில் தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மினி லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான அட்டை கோன் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.