தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்த பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி விடுக்கப்பட்ட அரையாண்டு தேர்வு விடுமுறை ஜனவரி 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 2 முதல் பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் திறன் மேம்பட தற்போது சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆற்றலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்கள் கணிதம் என்ற பெயரில் புதிய முயற்சியை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது.
முன்னதாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வில் பலரும் கணித பாடங்களை படிப்பதிலும், தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதிலும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் இதன் பின்னணியில், கணித பாடத்தை ஆசிரியர்கள் சரியான முறையில் கற்றுக் கொடுக்காததும் ஒரு காரணம் என்று தெரியவந்துள்ளது. அதனால் ஆசிரியர்களுக்கு முதலில் சிறப்பு பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கணித பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுதன் செய்து வருகிறார்.
இவர் பிறப்பித்த உத்தரவின்படி, வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கணிதம் என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் கணித பாடத்தை பயமில்லாமல் மிகவும் எளிய முறையில் மகிழ்ச்சியாக மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும். மேலும் பாடம் நடத்தும் சூழல் மிக மகிழ்ச்சியாக மாறும். இதுபற்றிய வழிகாட்டுதல்களை ஆசிரியர்களுக்கு துறை சார்ந்த வல்லுநர்கள் கற்றுத்தர உள்ளனர்.
இதையடுத்து ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் அரசு பள்ளிகளை சேர்ந்த கணித ஆசிரியர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டிப்பதால் இந்த விடுமுறை முடிந்தவுடன் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்றும் 10,11 ,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.