நடிகர் கமலை வைத்து கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை படக்குழு 112 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் வில்லனாக விஜய் சேதுபதியும், கமல்ஹாசன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஹீரோயின் யார் என்று தற்போது வரை படக்குழு வெளியிடவில்லை. இந்த படத்தினை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இது ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விக்ரம் படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை படக்குழு 112 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் படத்தின் பட்ஜெட் முழுவதும் கவர் செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.