தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு சில பண்டிகைகளுக்கு போனஸ் தொகை வழங்கப்படும். அதன்படி பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், முறையான கால முறை ஊதியம் பெறும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.3000 பொங்கல் போனஸ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2020-2021 கணக்காண்டிற்கு தற்காலிக சில்லறை செலவினத்தில் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழுநேரம் மற்றும் பகுதிநேர பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.