Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க!…. திருப்பதி ஏழுமலையானுக்கு சொகுசு கார்….. நன்கொடையாக வழங்கிய பக்தர்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 1.04 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் உண்டியலில் தங்கள் வேண்டுதலுக்கேற்ப செலுத்திய காணிக்கையின் மூலம் 833.41 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த வருடம் 48.75 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கடந்தவருடம் 5.96 கோடி லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் விஸ்வநாதன் 29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா கிரிஸ்டா, என்ற காரை நேற்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

Categories

Tech |