பிசிசிஐ தலைவர் கங்குலி பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரியத்திடம் விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வாங்கி கொடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4-ஆம் தேதி மொஹாலியில் நடைபெறவுள்ளது. இந்த முதல் போட்டி கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இந்நிலையில் முதலில் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிசிசிஐ தலைவரான கங்குலி பஞ்சாப் கிரிக்கெட் வாரிய தலைவரான ராஜேந்தரிடம் தனிப்பட்ட முறையில் இதுதொடர்பாக பேசியுள்ளார். அதன்படி அவர் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளதாக தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.