தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் “வாரிசு” படத்தின் 2வது பாடலான ‘தீ தளபதி’ யூ டியூப்பில் 1 கோடி பார்வையாளர்களை கடந்து அசத்தியுள்ளது. பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் இந்த சாதனையை எட்டியுள்ளது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில், சிம்பு குரலில் தமன் சையமைத்துள்ளார். நேற்று மாலை 4.04 மணிக்கு வெளியான பாடல் இன்று மாலை 3.30 மணிக்கே இந்த இலக்கை எட்டியது.