பெங்களூரில் நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் நியூசிலாந்து அணியின் வீரரான trent Boult ராஜஸ்தான் அணி 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள்.
இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இவ்வாறு இருக்க ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளான இன்று மொத்தமாக 161 வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். இதனையடுத்து மீதம் இருப்பவர்கள் மறுநாள் மிக வேகமாக ஏலத்தில் விடப்படுவார்கள். இந்நிலையில் ரூபாய் 8 கோடிக்கு நியூசிலாந்து அணி வீரரான Trent Boult ஐ ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.