Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அட்ரா சக்க…!! ”இனி தான் ஆட்டமே இருக்கு”…. ரஜினி VS கமல் கூட்டணி …!!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இன்று கோவில்பட்டியில் பிரசாரத்தை மேற்கொண்ட கமல், புதியதாக வருபவர்கள் ஒரு காரணத்திற்காக வருகிறார்கள். நான் வந்த காரணம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். கண்டிப்பாக மாற்றம் வேண்டும். ரஜினியும் அதையே சொல்லியுள்ளார்.

ரஜினி அவர்களுடைய கொள்கை என்ன ? என்பதை இன்னும் தெளிவாக சொல்லவில்லை. ஒற்றை வார்த்தையில் அரசியலுக்கு வேறுவேன் என்று சொன்னதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கைகளை சொல்லட்டும், பிறகு நாங்கள் பேசுவோம்.

எங்கள் இருவருக்கும் இருக்கு நட்பு எளிதான ஒன்று. நாங்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வது, இருவருமே ஒரு போன் காலில் பேசும் அளவுக்கு இருக்கின்றோம். ஒரு போன் போட்டால் கிடைக்கக் கூடியவர்கள் தான் இருவருமே. கொள்கை படியும்,  மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக் கொடுத்து விட்டு நாங்கள் கூட்டணியாக களமிறங்க தயார் என கமல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |