இயக்குனர் அட்லியின் அலுவலகத்திற்கு பிரபல நடிகர் விஜய் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இளம் இயக்குனராக ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி வருபவர் அட்லி . இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி ,மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்கள் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை அட்லி இயக்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அட்லியின் அலுவலகத்திற்கு தளபதி விஜய் திடீர் விசிட் அடித்த வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தயாராகி வெளியாக உள்ளது. இதையடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குவது யார் ? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர் . இந்நிலையில் அட்லீ -விஜய் சந்திப்பு படம் குறித்ததாக இருக்குமா? என்பது கூடிய விரைவில் தெரியவரும் .