நடிகர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து மெர்சல், பிகில் என விஜய்யின் அடுத்தடுத்த படங்களை அட்லி இயக்கினார்.
Five years of #Theri
Love you Na @actorvijay
Love you all pic.twitter.com/lVDLLU4v9v— atlee (@Atlee_dir) April 14, 2021
தற்போது இயக்குனர் அட்லி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அட்லி நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு தெறி திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.