அட்லீயின் அடுத்தப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் அட்லி மெர்சல் ,ராஜா ராணி ,தெறி ,பிகில் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் தயாரிப்பில் 2017-ல் வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படம் வெளியானது. தற்போது அட்லி பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ‘அந்தகாரம்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
Happy to collaborate with u @NetflixIndia #Andhaghaaram https://t.co/PreO2lxed9
— atlee (@Atlee_dir) October 30, 2020
இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை நவம்பர் 24-ம் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடுவதாக அட்லி அறிவித்துள்ளார். விக்னராஜன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மிஷா கோஷல் , பூஜா ராமச்சந்திரன் என பலர் நடித்துள்ளனர்.