Categories
இந்திய சினிமா

அட்லி மனைவி செஞ்ச வேலைய பாருங்க…. வைரலாகும் புகைப்படம்…. இதெல்லாம் ரொம்ப ஓவர்….!!!

ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதைத் தொடர்ந்து விஜய்யின்  சூப்பர் ஹிட் படங்களான மெர்சல், பிகில், தெறி  போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம்பிடித்தவர்.  ஷங்கரின் இயக்குனர் என்ற அடையாளத்தோடு அறிமுகமானர். ஆனால் தற்போது தனக்கென ஒரு தனி அடையாளம் இதை உருவாக்கியிருக்கிறார். டைரக்டர் என்று சொல்லப்படும் அளவுக்கு பிரபலமானவர்.

https://www.instagram.com/p/CZtQ2rzhLcm/?utm_source=ig_web_copy_link

இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி ப்ரியா எப்போதும் ஜாலியாக ஊர் சுற்றுவதும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லீயுடன் ஆட்டம் போட்டு ரீல் போடுவது என இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், தற்போது கணவருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு தாறுமாறாக கமெண்ட் வரும் என தெரிந்த இவர் கமெண்ட்யை ஆப் செய்துள்ளார். ஆனாலும் நெட்டிசன்கள் விடாமல் இவரது மற்ற பதிவுகளில் கமெண்ட் செய்திருக்கிறார்கள். மேலும் அட்லி தற்போது ஷாருக்கானுடன் லயன்  என்கின்ற படப்பிடிப்பை இயக்குவதில் தீவிரமாக உள்ளார். மேலும் இந்த படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Categories

Tech |