அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அட்லீ. அடுத்ததாக இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் கைது நடவடிக்கை தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு தாமதமாவதால் நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.