பிரபல இயக்குனர் அட்லி -பிரியா தம்பதிகள் பெற்றோர் ஆகப்போவதாகசமீபத்தில் சமூக வலைதளங்களில் சந்தோசமான தகவலை வெளியிட்டுருந்தனர். இதற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அட்லீயின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் அட்லீ – பிரியா தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதை சமூக வலைதளங்களில் உறுதி செய்த நிலையில் பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.