Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லீ- ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் இதுவா?… தீயாய் பரவும் தகவல்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அட்லீ. இதை தொடர்ந்து இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Shah Rukh Khan & Atlee's Next To See King Khan In A Double Role? Details On  Shooting Schedule Out

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்கு ‘ஜவான்’ என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ‘லயன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌

Categories

Tech |