Categories
மாநில செய்திகள்

அட்வான்ஸ் புக்கிங்கில் புதைகுழிகள்…. சுடுகாட்டில் திடுக்கிடும் சம்பவம்….!!!!

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் 100 நாள் வேலை நடந்து வருகிறது. இந்த 100 நாள் திட்டத்தின் மூலம் வேலை இல்லாத கிராமப்புற மக்களுக்கு வேலை கிடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவுதுமே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. சென்னை அடுத்த சோழவரம் ஊராட்சி ஒன்றியம், ஜெகநாதபுரம் ஊராட்சி அகரம் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றங்கரையை ஒட்டி இடுகாடு இருக்கிறது. அந்த இடுகாட்டை சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அங்கு 4 அடி நீளம் 2 அடி அகலம் கொண்ட 50-க்கும் அதிகமான புதைகுழிகள் வெட்டப்பட்டன. இருந்தாலும் ஒரே நேரத்தில் இத்தனை குழிகளா, யார் எப்படி இருந்திருப்பார்கள் என்று அந்த பகுதியில் உள்ள மக்கள் பயத்தில் இருந்தனர். அதில் சில குழிகளில் சடலங்கள் புதைக்கப்பட்டது போல் மண் குவிந்து மூடப்பட்டிருந்தது. இதனால் அட்வான்ஸ் புக்கிங்கில் புதை குழிகள் வெட்டப்பட்டு, அவற்றில் சடலம் புதைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனுடன் அந்த இடத்தில் ஏராளமான மது பாட்டில்களும் இருந்தன.

இதுபற்றி அங்கே இருந்தவர்களிடம் கேட்டபோது, கடந்த மாதம் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் இந்த குழிகள் வெட்டப்பட்டதாக தெரியவந்தது. இந்த புதிய புதைகுழிகள் ஒரு பய உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 100 நாள் வேலைத்திட்டத்தை இடுகாட்டில் புதைகுழி வெட்டவா பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற பணிகளை நேரில் ஆய்வு செய்து 100 நாள் வேலைத்திட்டத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் நீர் நிலை பாதுகாப்பு, மழைநீர் வடிகால் அமைப்பு போன்ற பணிகளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதனால் மக்களிடையே தேவையற்ற பயம் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |