Categories
சினிமா தமிழ் சினிமா

அட அப்படியா…? தனுஷ் சும்மாவே அப்படித்தானாம்…. உண்மையை உடைத்த நண்பர்கள்…!!!!

தனுஷும்  ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து வந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிய போவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இவர்களை சேர்த்து வைக்க தொடர் முயற்சி நடந்து வரும் நிலையில், மகன்கள் யாத்ரா , லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினியும் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் தனக்கு இல்லை என்கிறார் .இதனைத் தொடர்ந்து தனுஷ் சும்மாவே குடும்ப விஷயத்தைப் பற்றி பேசமாட்டார். ரொம்ப அமைதியான ஆளு என்றும், அவர் மனதில் என்ன ஓடுகிறது என்பதே தெரியாது என அவரது நட்பு வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதை அடுத்து தனுஷ் தன் கவனத்தை திசை திருப்ப அடுத்தடுத்து பல  புது படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார்.

மேலும் ரஜினியைத் தவிர்த்து, தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவும் அவரது மகன் வாழ்க்கையை சரி செய்ய முயற்சி செய்து வரும் நிலையில் தனுஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்` இதனால் கடுப்பான  தனுஷ் இத்தனை ஆண்டுகளாக என் திருமண வாழ்க்கையில் நடந்ததைப் பற்றி நான் உங்களிடம் கூறியதில்லை. இப்பொழுது கேளுங்கள் என்று 30 மணி நேரம் பேசியுள்ளார் தனுஷ். “இதெல்லாம் ஒன்றுமே இல்லை, நான் நடந்ததை முழுவதும் கூறினால்  தாங்க மாட்டீர்கள் “என்ற தனுஷின் பேச்சை கேட்டு அவரது பெற்றோர்கள்  அழுது விட்டார்கள் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |