தீப்பெட்டி என்பது தீக்குச்சியை வைக்க வடிவமைக்கப்பட்ட அட்டை அல்லது மெல்லிய மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெட்டி ஆகும். இது பொதுவாக உள்ளே உள்ள குச்சிகளை எரியவைக்க கரடுமுரடான, ஒரு முனையில் உரசக்கூடிய மேற்பரப்பைக் கொண்டிருக்கிறது.அந்த மேற்பரப்பில் போஸ்பரசு தடவப்பட்டிருக்கும். இந்த தீப்பெட்டியை 1826 இல் ஜான் வார்கர் என்பவர் வழக்கம்போல அவருடைய கெமிக்கல் பரிசோதனை கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அந்த கெமிக்கல் அனைத்தையும் ஒரு டப்பாவில் போட்டு ஒரு குச்சியால் அதை கலக்கியிருக்கிறார்.
பின்னர் அந்த குச்சியை எடுத்து எதார்த்தமாக தரையில் உரசியபோது தீப்பிடித்துள்ளது. இப்படி தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான் இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் தீப்பெட்டி. அதுமட்டுமின்றி அந்த காலத்தில் அதிக விலை கொடுத்து மக்கள் லைட்டர் வாங்கி பயன்படுத்திக்கொண்டிருந்தபோது, இவர் கண்டுபிடித்த குறைந்த விலையில் கிடைத்த இந்த தீப்பெட்டியால் மக்கள் பயனடைந்தனர்.