ஆர்யாவின் பிறந்தநாள் அவருடைய வீட்டில் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட நிலையில் கணவர் ஆரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு சாயிஷா வாழ்த்துக்களை தெரிவித்து தங்களுடைய மகளின் முகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி சென்றிருந்த நடிகை சாயிஷா இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் குழந்தையின் முகம் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் தன்னுடைய கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து குழந்தை ஆரியானா, ஆர்யா, சாயிஷா ஆகியோர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே..! நீங்கள் ஒரு சிறந்த கணவர், தந்தை மற்றும் சிறந்த மனிதர். என்றும் நீங்கள் என் வாழ்வில் உள்ளதை பெரும் பாக்கியமாக நாங்கள் கருதுகிறோம். என்னுடையதாக இருப்பதற்கு நன்றி நான் என்றென்றும் உங்களை நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.