இந்தியாவிலேயே மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் என்றால் அது கண்டிப்பாக தமிழகம் தான் என அமைச்சர் கே.என்.நேரு பெருமை தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர், சாலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் முதல்வரிடம் விவரங்களை கூறி தேவையான நிதியை பெற்று தர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் திருச்சி தொட்டியம் பகுதியில் 49 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில், துறையூர் கோம்பையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் 2 கோடி குடும்பங்கள் உள்ளன. இதில் 1 கோடி 75 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 7 லட்சம் மக்களுக்கு மட்டும் தான் 100% வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.