சம்பா நெல் அறுவடைக்கு பின்பு நெல் தரிசில் பயறு சாகுபடி செய்வது குறித்த மாநில அரசின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பா நெல் அறுவடையை தொடர்ந்து நெல்வயல்கள் தரிசாகக் கிடக்கும் சமயத்தில் அதில் பயறு வகைகளை பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் அதிக அளவில் ஆபத்தை எட்டலாம். மேலும் பொதுமக்களின் புரத தேவையையும் ஊட்டச்சத்து குறைபாடும் நீக்க முடியும் என்பது மாநில அரசின் கருத்து. எனவே இதற்காக வெறும் 60 நாட்களில் விளையக்கூடிய மற்றும் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி வறண்ட நிலப்பரப்புகளில் வளரக்கூடிய சில பயறு வகைகளை பயிரிடுவது குறித்து மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறான பயிறு வகைகளை ஆண்டுக்கு ஒருமுறை பயிரிடுவதன் மூலம் மண்ணின் வளமும் மேம்படுத்தப்படும் மேலும் ரசாயன பாதிப்புகளும் நீங்கும்.
எனவே சம்பா நெல் அறுவடைக்கு பின்பு நெல் வயல்களில் இருக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தி இவ்வாறான பயிறு வகைகளை பயிரிட தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சம்பா நெல் சாகுபடி நிறைவுபெற்ற கிராமங்களில் சென்று உளுந்து அல்லது மற்ற பயறு வகைகளை இதுகுறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த பல முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் கிராம வாரியாக விவசாயிகளை கண்டு பயறு வகைகளை பயிரிடுவதன் அவசியம் குறித்து விளக்கப்படுகிறது மற்றும் இதில் கிடைக்கும் லாபம் குறித்தும் எடுத்துக் கூறப்படுகிறது.
இதற்காக 138 பயிறு உடைக்கும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு எளிமையாக பயிறு வகைகளை உடைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இதற்காக விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து விலையை வைக்கப்படும் பயிறு வகைகளை கொள்முதல் செய்ய அரசே கொள்முதல் நிலையங்களையும் நிறுவியுள்ளது. இந்த கொள்முதல் நிலையங்களில் உளுந்து கிலோ 63 ரூபாய்க்கும், பாசிபயிறு கிலோ 74 ரூபாய்க்கும் அரசின் மூலம் பெறப்படுகிறது.