உலகில் இன்றைய நவீன காலத்தில் இன் இணையதள மோசடிகளால் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதிலும் சிலர் வித்தியாசமான முறையில் மோசடி தந்திரங்களை கையாண்டு வருகின்றனர். இதனால் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள மெதுகும்மலை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் கொரியர் சர்வீஸ் மூலமாக ஒரு பார்சல் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு அந்த போய் சேரவில்லை. எனவே அந்த நபர் உடனடியாக இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனர் செல்போன் நம்பரை தேடி எடுத்துள்ளார்.
அதன் பிறகு அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினாரார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் டெலிவரி மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி ஒரு லிங்க் கொடுத்துள்ளார் அந்த லிங்கை அவர் அப்டேட் செய்த உடன் அவரின் செல்போனுக்கு ஒரு OTP வந்த அடுத்த நொடியே அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1,44,000 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட நபர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகுதான் போலியான கொரியர் விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்பது அவருக்கு தெரிய வந்தது.
அதனைப்போலவே நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த ஒருவரின் வாட்ஸ் அப்புக்கு மற்றொரு வாட்ஸ்அப் எண் மூலம் நாய்கள் விற்பனை விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அந்த விளம்பரத்தை பார்த்து அவர் படத்தில் உள்ள ஒரு நாயை வாங்குவதற்காக உடனே ரூ.10,000 அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு அந்த நாய் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நபர் ஏமாற்றம் அடைந்ததோடு ரூ.10,000 இழந்துள்ளார். இதுகுறித்து குமரிமாவட்ட சைபர் கிரைம் போலீசுக்கு தனித்தனியாக புகார்கள் வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.