லைலா தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் தமிழ் திரையுலகில் கள்ளழகர் படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் போன்றவருடன் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தில், தீனா, மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
இவர் ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை 2006ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்கின்றார் கார்த்தி உடன் சர்தார் படத்தில் நடித்திருக்கின்றார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் தற்போது நடிகை லைலா தனது கணவர் மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.