தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் சென்ற 1988-ம் வருடம் சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவருமே திரையுலகில் பிரபலமான நடிகைகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
கடந்த 2004-ம் வருடம் வரை சேர்ந்து வாழ்ந்து வந்த கமல்ஹாசன்-சரிகா தம்பதியினர் பின் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் சரிகாவின் சமீபத்திய புகைப்படமானது தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நம்ம நடிகை சரிகாவா, ஆளே மாறிவிட்டார் என கூறி வருகின்றனர்.