Categories
சினிமா தமிழ் சினிமா

அட இது நம்ம சமந்தாவா?…. தோழிகளுடன் எடுத்த இளம் வயது புகைப்படம் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

தற்போது தமிழ் திரையுலக நட்சத்திரங்களின் பழைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி உலா வருகிறது. அந்த வரிசையில் இப்போது பிரபல தென் இந்திய திரை உலகின் முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது யாரு என்றால், நம்ம நடிகை சமந்தா தான்.

அதாவது, முன்னணி நடிகை சமந்தா தன் தோழிகளுடன் இளம்வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சமந்தா மருத்துவ சிகிச்சையில் உள்ளார். சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த யசோதா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சகுந்தலம், குஷி போன்ற படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |