Categories
தேசிய செய்திகள்

அட…. இப்படியொரு திருமணமா?…. ஜெர்மனி காதலனை இந்து முறைப்படி திருமணம் செய்த இளம்பெண்…!!

ரஷ்யாவில் ஜூலியா உக்வெஸ்கினா என்பவர் வசித்துவருகிறார். இவர் வியட்நாம் நாட்டில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனிடையில் ஜெர்மனியில் கிறிஸ் முல்லர் என்பவர் வசித்துவருகிறார். இவர் பன்னாட்டு நிறுவனத்தில் செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் தொழில் ரீதியிலான பணத்திற்காக வியட்நாம் சென்றுள்ளார். அங்கு ஜிலியாவை சந்தித்து, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் காதலர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்தந்த நாடுகளில் பின்பற்றப்படும் பண்பாடு பழக்க வழக்கங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.

இந்த காதல் ஜோடி இந்துமத முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். கிறிஸ் உடனே குஜராத் மாநிலம் சபர்காத் மாவட்டத்தில் உள்ள தனது நண்பர்களை தொடர்பு கொண்டு , திருமணத்தை இந்து மத முறைப்படி நடைபெற வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து இவர்கள் திருமணத்தைச் சபர்காத் மாவட்டத்தில் நடத்த தேவையான ஏற்பாடுகளை நண்பர்கள் மேற்கொண்டனர். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று ஹிமத்நகர் கிராமத்தில் கிறிஸ் மற்றும் ஜூலியாவிற்கு இந்து மத முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |