Categories
சினிமா தமிழ் சினிமா

அட இவரா..!! ‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோ யார் தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

கொரோனா குமார் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதன்பின் இயக்குனர் கோகுல் காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் கொரோனா குமார் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது .

Silambarasan filmography - Wikipedia

இந்த படத்தில் முதலில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் கொரோனா குமார் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் சிம்பு மாநாடு, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் ‌ .

Categories

Tech |