சன் டிவியில் சஞ்சீவ் நடிக்கவுள்ள கயல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்தவர் சஞ்சீவ். இவர் இந்த நிகழ்ச்சியில் கதாநாயகியாக நடித்த ஆல்யா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐலா சையத் என்ற ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இதைத் தொடர்ந்து சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த சீரியல் நிறைவடைந்தது. சமீபத்தில் சஞ்சீவ் தனது புதிய சீரியல் குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதன்படி சன் டிவியில் ‘கயல்’ என்ற புதிய சீரியலில் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த சீரியலில் சஞ்சீவிற்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து பிரபலமடைந்த சைத்ரா ரெட்டி தான் கயல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கயல் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.