Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அட…. இவர்தாங்க அமைச்சர் செல்லூர் ராஜூ…. பெண்ணை ஏமாற்றி ரூ.7 லட்சம் மோசடி செய்த நபர்….!!!!

சென்னை மாதவரம் பால்பண்ணை குடியிருப்பில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவரை  சத்ய நாராயணன் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்துள்ளார். இதையடுத்து காயத்ரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சத்யநாராயணன் என்பவர் தன்னை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரின் தம்பி என்று கூறியுள்ளார் .

அதன் பிறகு அமைச்சர் செல்லூர் ராஜு தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அவர் மூலமாக கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி காயத்ரிடம் ரூ.7,00,000 வாங்கியுள்ளர். அதன் பிறகு அதிமுக கரை வேட்டி கட்டிய ஒருவரைக் காட்டி இவர்தான் அமைச்சர் செல்லூர் ராஜு என்று சத்தியநாராயணன் கூறியுள்ளார். காயத்ரி அவருக்கு மாலையும் சால்வை அணிந்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கி முத்திரையை அச்சிட்ட போலி சான்றிதழை வழங்கி வேலை உறுதி என்று கூறினார். இதனையடுத்து நீண்ட நாட்களாகியும் பணிக்கான ஆணை வராத நிலையில் தான் ஏமாற்ற அடைந்துவிட்டோம் என்று எண்ணி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில்  காவல்துறையினர் சத்திய நாராயணன், மனைவி ஷாலினி மற்றும் உறவினர் தாமஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |