வடகொரியாவின் தலைநகரில் நடைபெற்ற சந்திர புத்தாண்டு நிகழ்ச்சியில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு அந்நாட்டு அதிபரின் மனைவி பங்கேற்றுள்ளார்.
வடகொரியாவின் தலைநகரமான பியோங்யாங்கிலுள்ள மன்சூடே என்னும் கலை அரங்கில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி சந்திர புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பொது நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.
இதற்கிடையே கிம்மின் குடும்பத்தார்கள் கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நிலையில் அவரின் மனைவியான ரி சோல் ஜு இந்த சந்திர புத்தாண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
இவர் நிகழ்ச்சியின் போது தனது கணவரின் மறைந்த தந்தை மற்றும் தாத்தாவின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் அரண்மனைக்கு சென்றுள்ளார். இவரை நிகழ்ச்சியில் கண்ட பொதுமக்கள் கரகோஷமிட்டு வரவேற்றுள்ளார்கள்.