Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… என்னப்பா இப்படி சொல்லிட்டாரு… மீண்டும் அஜித்தை சீண்டிய வாரிசு தயாரிப்பாளர்…. கடுப்பில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். அதன் பிறகு நடிகர்‌ விஜய் தில் ராஜு தயாரிப்பில், வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதே போன்று நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த 2 படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே தற்போது இருந்தே மோதல் தொடங்கியுள்ளது. அதோடு வாரிசு தயாரிப்பாளர் தமிழகத்தில் நம்பர் ஒன் நடிகர் விஜய் தான் என்று கூறியது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தார்கள்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் தளபதி விஜய் தான் தமிழகத்தில் நம்பர் ஒன் நடிகர் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு மாஸ் ஹீரோ என்ற அடையாளம் தியேட்டரில் படங்கள் வெளியாகும் போது கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தெரிந்து விடும். அப்படி பார்த்தால் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கடைசி படங்கள் 60 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. நடிகர் விஜயின் படங்கள் வெற்றி, தோல்வி என்பதை தாண்டி வசூலில் எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம். இதனால்தான் நான் வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கேட்டதோடு, நடிகர் விஜய்யை தமிழகத்தில் நம்பர் ஒன் நடிகர் என்று சொன்னதாக கூறியுள்ளார். மேலும் இது அஜித் ரசிகர்களிடையே தற்போது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |