நிக்கோலா டெஸ்லா இவர் உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர்களின் ஒருவர். அவருடைய கண்டுபிடிப்புகள் பல தலைமுறைகளின் கற்பனைகளை எழுப்பி விட்டதால்தான் அவருக்குப் பின்னால் பல கண்டுபிடிப்பாளர்கள் அவரால் தோன்றினார்கள். அதனால்தான் அவரின் பெயர் இன்னும் உலகில் அழியாமல் வாழ்ந்து வருகிறது. உலகில் 27 நாடுகளில் 270க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை வைத்திருந்த பெருமை இவரை மட்டுமே சாரும். அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் மட்டும் 112 காப்புரிமைகளை வைத்திருந்தார். நிக்கோலா டெஸ்லா மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளராக வரலாற்றில் இடம் பிடித்து இருந்தாலும், அவருடைய ஒவ்வொரு கண்டுபிடிப்பும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதுதான் வயர்லெஸ் சார்ஜிங் அதாவது செல்போன்களுக்கு சார்ஜிங் வயரை பயன்படுத்தாமலே சார்ஜ் செய்வதற்கான நவீன கருவிகளை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இதனை கடந்த 1919 ஆம் ஆண்டிலேயே சிறிய அளவில் யோசித்தவர் டெஸ்லா. ஒரு சூப்பர்சோனிக் வான்வழிக்கான நிலத்திலிருந்து 40 ஆயிரம் அடி உயரத்தில் மின்சாரத்தை வேகமாக கடத்த முடியும் என்று நம்பினார். அதிலும் குறிப்பாக நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு நான்கு மணி நேரத்திற்குள் மின்சாரத்தை கடத்தும் முடியும் என்று நம்பினார். இவர் கொண்டு வந்த இந்த முறையை வைத்தே தற்போது வயர்லெஸ் சார்ஜிங் என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த இவரின் மரணமானது தற்போது வரை விடை தெரியாத மர்மமாகவே இருந்து வருகிறது. 1943 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நியூயார்க்கில் இருக்கக்கூடிய த நியூ யார்க்கர் என்ற விடுதியில் தங்கியிருந்தார். அன்றைய தினம் தான் அவர் இறந்தும் போனார். இதை தொடர்ந்து அவரது மரணம் தொடர்பாக விசாரணை செய்தபோது அவரது அறையில் எக்கச்சக்கமான கண்டுபிடிப்புகள் இருந்ததாகவும், அது எதையுமே அமெரிக்கன் அரசு வெளியில் கொண்டுவராமல் மறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
150 வருடங்களுக்கு முன்பாகவே ஒரு வயர்லெஸ் மின்சாரம் போன்ற கண்டுபிடிப்பை கண்டுபிடித்த நிகோலா டெஸ்லா இன்னும் என்னென்ன பொருள்களை கண்டுபிடித்தார் என்பது இதுவரை மர்மமாக மட்டும்தான் உள்ளது. இப்படி உலக அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னோடியாக விளங்கியவர் நிகோலா டெஸ்லா. இன்று உலகப் பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் ஏலான் மஸ்க் தன்னுடைய கார் நிறுவனத்திற்கு இவரது பெயரான டெஸ்லா என்பதை வைத்துள்ளார். அவரது பெயருக்கும் இந்த டெஸ்லா காருக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது. டெஸ்லா காரில் நிக்கோலா டெஸ்லா கண்டுபிடித்த ஏசி மோட்டார் மெக்கானிசத்தின் மின் மோட்டார்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதால்தான் எலான் மஸ்க் அவருடைய கார் நிறுவனத்திற்கு டெஸ்லா என்ற பெயரை சூட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் வயர்லெஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன், வயர்லெஸ் எலக்ட்ரிகல் டவர், ரிமோட் கண்ட்ரோல் கப்பல்கள், கேமரா எர்த் மிஷின், செயற்கை டைடல் அலைகள், தி டெத் ரே போன்ற எக்கச்சக்க கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.