Categories
சினிமா விமர்சனம்

அட..என்ன சார் கோவமா இருக்கீங்களா….? செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம்…. இணையத்தில் நெட்டிசன்கள் மரண கலாய்…!!!!

இயக்குனர் செல்வராகவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை இணையதளவாசிகள் பார்த்து கலாய்த்து வருகின்றனர். 

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு இவர் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகின்றார். செல்வராகவன் இயக்குனராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக உள்ளார். இவர் கீர்த்தி சுரேஷ், விஜய் உள்ளிட்டோர்களுடன் தற்போது படத்தில் நடித்து வருகின்றார். இவர் தற்போது தனுஷை வைத்து “நானே வருவேன்” படத்தை இயக்கி வருகின்றார்.

https://www.instagram.com/p/CZ_XjcyoR8H/?utm_source=ig_web_button_share_sheet

இயக்குனர் செல்வராகவன் இணையதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அவ்வபோது தனது கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது செல்வராகவன் முறைத்துப் பார்ப்பது போல் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதைப்பார்த்த இணையதளவாசிகள், “என்ன சார் கோபமா இருக்கிறீர்களா? யார கோபமா பாக்குறீங்க சார்? நீங்கள் வேண்டுமானால் வில்லனாக நடிங்கள் தலைவா” என  கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

 

Categories

Tech |