Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்ன சொல்றீங்க…. தளபதியின் ‘வாரிசு’ பொங்களுக்கு ரிலீஸ் கிடையாதா?…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வாரிசு படத்தின்‌ “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்கங்களை ஒதுக்க வேண்டும் என்றும் டப்பிங் படங்களுக்கு மிச்சம் இருக்கு திரையரங்குகளை ஒதுக்கினால் போதும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே வாரிசு படம் முழுக்க முழுக்க தமிழ் படம் என்று இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளதால், திட்டமிட்ட நேரத்தில் வாரிசு படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு நேருக்கு நேர் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாரிசு படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தளபதி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |