பொதுவாக எலுமிச்சம் பழத்தை நாம் அனைவரும் சமையலுக்கு மற்றும் பல விஷயங்களுக்கு பயன்படுத்துவோம். அதையும் தாண்டி வேறு சில விஷயங்களுக்கு நாம் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தலாம். அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
எலுமிச்சம் பழத்தில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலுக்கு பல நன்மைகளைத் தரும். காலைநேரத்தில் எலுமிச்சம் பழத்தை ஜூஸ் போட்டு குடிக்க தாகம் தீரும். பலவிதமான சமையலுக்கு எலுமிச்சம்பழத்தை உபயோகம் செய்கின்றன. இன்னும் பல வழிகளில் நமக்கு உதவியாக உள்ளது. ஒரு கப் சூடான லெமன் தண்ணீரானது தினமும் காலையில் தவறாமல் குடித்து வந்தால் உடலை சுத்தப்படுத்தும் ஒரு அற்புத மருந்து. எலுமிச்சைபழமானது அதில் உள்ள அற்புதமான குணநலன்களில் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய அசுத்தங்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கின்றது.
எலுமிச்சம்பழமும், சிறிது தண்ணீரும் சேர்ந்தால் அற்புதமான சக்தியானது ஈரலில் பைல் ஆசிட் எனப்படும் ஒரு ஆசிட்டை சுரக்கிறது. இது ஜீரண சக்திக்கு மிகவும் தேவையானது. எலுமிச்சம்பழத்தை கொசு விரட்டியாக பயன்படுத்தலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். எலுமிச்சம் பழத்தை கொசுவிரட்டி ஆகவும் நாம் பயன்படுத்தலாம். எலுமிச்சம்பழத்தை பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு கிராம்பு வைக்கவேண்டும். உங்கள் வீட்டில் மூலையில் எங்காவது வைத்துவிட்டால் கொசு தொல்லை இருக்காது. கடையில் பெரும்பாலும் நறுமண ஸ்பிரே பாட்டிலை பலரும் விரும்பி வாங்குவார்கள்.
அதேபோல எலுமிச்சம் பழத்தில் உள்ள நல்ல நறுமணம் ரம்மியமாக இருக்கும். எலுமிச்சம் பழச்சாற்றில் ரோஸ்மேரி மற்றும் சிறிது வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து சிறிய கப்பில் வைத்துவிட்டால் நறுமணம் மிகவும் அற்புதமாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு நாம் பயன்படுத்தும் சோப்பு மற்றும் லிக்யூடு போன்றவை அதிக அளவில் இந்த எலுமிச்சம்பழத்தை கொண்டு செய்துள்ளார்கள். எலுமிச்சம்பழத்தில் கறையை நீக்குவதற்கான சக்தி உள்ளது.
மேலும் எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவற்றை எலுமிச்சம் பழங்கள் எடுத்துவிடும். சோப் வடிவத்தில் இல்லாமல் எலுமிச்சம்பழத்தை நேரடியாகவும் நாம் பாத்திரம் கழுவுவதற்கு உபயோகிக்கலாம். எலுமிச்சம்பழம் வாங்கி சிறிது நாட்களிலேயே சுருங்கி விடும் அல்லது கருத்துவிடும். எலுமிச்சை பழங்கள் நீண்ட நாட்களாகியும் சுருங்காமல் இருப்பதற்கு ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் பிடித்து அதனுள் எலுமிச்சம் பழத்தை போட்டு வைத்தால் எலுமிச்சம்பழமானது பல நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும்.