கனடா அண்டாரியோ மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடா அண்டாரியோ மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதர் அஜெய் பிசாரியா கூறியுள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய மாணவர்கள் சென்ற வேன் முன்னால் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங்,கரன்பால் சிங்,மொகித் சவுகான்,மற்றும் பவன் குமார் என அடையாளம் காணப்பட்டதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக இந்திய தூதர் அஜெய் பிசாரியா தெரிவித்துள்ளார்.