Categories
உலக செய்திகள்

அட கடவுளே….! “மசூதியில் குண்டு வெடிப்பு தாக்குதல்”…. பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு…. பீதியில் மக்கள்….!!!

பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நடந்த தாக்குதளுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் வழிபாட்டு தளத்திற்கு துப்பாக்கியுடன் 2 மர்ம நபர்கள் வந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும் அவர்கள்  உடலில் கட்டியிருந்த வெடி குண்டையும் திடீரென வெடிக்க செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 65 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்த நிலையில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பெஷாவர் மத வழிபாட்டு தளத்தில் தாக்குதல் நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. இதனை தொடர்ந்து ஐ.நா. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அரசு குண்டு வெடிப்பு செய்தவர்களை கைது செய்வோம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |