பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் வழிபாட்டு தளத்திற்கு துப்பாக்கியுடன் ஒருவர் வந்தார். அப்போது அவர் வழிபட்டுக் கொண்டு இருப்பவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். மேலும் அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டையும் திடீரென வெடிக்க செய்தார். இதனை தொடர்ந்து இந்த தாக்குதலில் 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 196 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பெஷாவர் மத வழிபாட்டு தளத்தில் தாக்குதல் நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.