Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அட கருமமே…! இப்படியா வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போடுவ ? – தென்காசியை பதற வைத்த ”மகா பிரபு”

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே வாட்ஸ் அப் ஸ்டேடஸை அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதால் தான் மரணமடைந்து விட்டதாக இளைஞர் ஒருவர் ஸ்டேடஸ் வைத்து நண்பர்களுக்கு டார்சல் கொடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள ஆவடையாபுரத்தை  சேர்ந்தவர் மகாபிரபு. இந்த மகாபிரபு அப்பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் செல்போனுடன் வாழ்க்கை நடத்தி வந்த மகாபிரபு,  வாட்ஸ்அப் ஸ்டேடஸை அடிக்கடி மாற்றி தன்னை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து, புளகாகிதம் அடைவார்.

ஆனால் இவரது மொக்கை ஸ்டேடஸை யாரும் சீண்டாததால் அதிகம் பேரை கவர ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி தான் இறந்து விட்டதாக கூறி ஸ்டேடஸ் வைத்துள்ளார். இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியுடன் நேரில் சென்றும், செல்போனில் தொடர்புகொண்டும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் முயன்றுள்ளனர்.

ஆனால் இந்த மகாபிரபு குத்துக்கல்லாடம் உட்கார்ந்து சிரித்துக்  கொண்டிருப்பதை பார்த்து, இதுவும் ஒரு ஜென்மமா என வாய்க்கு வந்தபடியெல்லாம் வசை மாறி பொழிந்து சென்றனர்.

Categories

Tech |