பட்டர் சிக்கன் பானி பூரி என்ற உணவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை உணவு பிரியர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
உணவில் தற்போது புதிய புதிய விஷயங்களை புகுத்துவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது. க்ரியேடிவிட்டி என்ற பெயரில் பல வித்தியாசமான உணவுகளை தயார் செய்து விற்பனைக்கு வைக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகியுடன் மில்க்ஷேக் கலந்த கலவை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த காம்பினேஷனை பலரும் கிண்டல் செய்துவந்தனர்.
Sh1t no one needs in life 🤢🤮🤢🤮 pic.twitter.com/TlcjwhCtMT
— Devlina Ganguly🌺🌺 (@w0nderw0manhere) September 25, 2021
இந்நிலையில் தற்போது பட்டர் சிக்கன் பானிபூரி என்பது வைரலாகி வருகின்றது. பானி பூரி என்பது இனிப்பு, காரம், புளிப்பு சுவை கலந்த ஒரு வட இந்திய உணவாகும். இந்தியாவிலும் தற்போது இது பிரபலமாக உள்ளது. பலரும் இதை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இப்படி இருக்கும் பொழுது பட்டர் சிக்கன் ப்ளேவரியில் பானிபூரி என்பது ட்ரெண்டாகி வருகிறது. இந்த பெயரை கேள்விப்பட்டதில் இருந்து நெட்டிசன்கள் மறுபடியும் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.