Categories
உலக செய்திகள்

அட கருமமே..! உணவு ஆர்டருடன் வந்த சிறுநீர் பாட்டில்… அதிர்ந்து போன வாடிக்கையாளர் …!!

பிரிட்டனில் பிரபல உணவு நிறுவனத்தில் ஆர்டர் செய்த ஒருவருக்கு உணவுடன் சேர்த்து சிறுநீர்  பாட்டில் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் பிப்ரவரி 21-ஆம் தேதி காலையில் ஆலிவர் மெக்மெனஸ் என்பவர் ‘ஹலோ பிரஸ் யுகே’ என்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில்  மீல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரில் அவர் மீல்ஸ் உடன் சேர்த்து சிறுநீர் அடங்கிய பாட்டிலை பெற்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு ட்வீட்டில் ,’உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் முகவரி அனுப்புங்கள் நான் இதை அனுப்பி வைக்கிறேன்’ என்று கூறி இருந்தார்.

 

அவர் அந்த புகைப்படத்தை பதிவிட்டு சில மணி நேரத்திலே அந்த புகைப்படம் வைரலாக பரவியது. பலரும் கமெண்ட்ஸ்களை தாறுமாறாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ‘ஹலோ பிரஸ்  யூகே ‘தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் இது குறித்து ஊடகங்களிலும் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பதால் ஆலிவர் தனது டிவீட்டை டெலிட் செய்து விட்டதாக கூறியுள்ளார்.

image

ஹலோ பெர்லினை  அடிப்படையாக கொண்ட நிறுவனம் ஆகும். மேலும் இந்த நிறுவனம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல நாடுகளில் மிகவும் பிரபலமாக உணவு டெலிவரி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |